ஜேர்மன் தலைநகர் பேர்லின் மாநகரில் என்ன நடந்தது? சுரேன் விளக்கம்!

Read Time:1 Minute, 47 Second

LTTE_PirabaGroupஎமது இனத்தையும், எமது பாரம்பரிய பிரதேசத்தையும் அழிக்கின்ற சிறீலங்கா அரசினால் நிறைவேற்றப்பட்டுவரும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய அபிலாசையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்த் தீர்வினை ஒருங்கிணைந்து அடையும் நோக்குடனும் ஆக்கபூர்வமான தொடர்ச்சியாக நடைபெறுகின்ற கலந்துரையாடல் ஜேர்மனியின் தலைநகரமான பேர்லின் மாநகரில் கடந்த 26, 27 திகதிகளில் நடைபெற்றது.

தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக் கலந்துரையாடல் நவம்பர் 2012 இல் ஆரம்பமானது. இக் கலந்துரையாடல்களில், தாயகத்திலிருக்கும் அரசியல் அமைப்புக்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் மக்கள் அமைப்பான தமிழ் சிவில் சமூகம், மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களது அமைப்புக்களான அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.

அடுத்துவரும் கலந்துரையாடல்களில் ஏனைய தமிழ் அமைப்புக்களையும் தொடர்ச்சியான முறையில் இணைத்துக் கொள்வதே நோக்கம்.

உலகத் தமிழர் பேரவை சார்பாக:
திரு.சுரேன் சுரேந்திரன்.

LTTE_PirabaGroup

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமல்ஹாசனின் அரசியலைத் தாங்க மாட்டீர்கள்! -பாரதிராஜா
Next post வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்- டக்ளஸ்