குஷ்புவின் வீட்டில் கல் வீசியவர்கள் யார்?

Read Time:1 Minute, 9 Second

ind.kushbooமு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராவதற்கு எதிராக நடிகை குஷ்பு வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதற்கு தி.மு.க.வினர் பலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணிக்கு குஷ்பு வீட்டில் கல் வீசப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு உள்ளது. வீட்டின் எதிரில் 10 ஆண்களும், 10 பெண்களும் திரண்டார்கள். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். திடீரென்று வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி விட்டு ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மதில் சுவரில் இருந்த விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. கல் வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண் கைது
Next post மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன்.. (PHOTOS)