(15.02 .2013) இன்றைய நாள் எப்படி..! வாருங்கள் உங்கள் இராசிக்கான பலன்களை பார்க்கலாம்!

Read Time:5 Minute, 38 Second

Raasipalan-003
மேஷம்:
இன்று, உங்களின் வெகுநாள் தவம் இனிதே நிறைவேறும். உண்மைக்கும், உழைப்புக்கும் அதிகமரியாதை தருவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி திருப்திகர முன்னேற்றம் தரும். பணவருமானம் உயரும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்:
இன்று, உங்களின் சொந்த நலனில் அக்கறை வளரும். உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப்போகலாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகலாம். நடைமுறை பணச்செலவு அதிகரிக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவதால், சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம்.

மிதுனம்:
இன்று, உங்களின் கடந்த கால நற்செயல்களுக்கு, உரிய பலன் கிடைக்கும். பொது நலப்பார்வையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். புத்திரர் விரும்பிய பொருள் அதிக தரம் உள்ளதாக பார்த்து வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம் உண்டாகும்.

கடகம்:
இன்று, உங்கள் நண்பர் ஒருவரின் நல்ல ஆலோசனை கிடைத்து செயல்களில் சீர்திருத்தம் செய்வீர்கள். தகுதி, திறமை பரிமளித்து தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை உருவாக்கும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றமாகும். ஆன்மிக சுற்றுலா சென்றுவர திட்டமிடுவீர்கள். நித்திரையில் இனிய கனவு வரும்.

சிம்மம்:
இன்று, உங்களின் அமைதி நிறைந்த செயல்திறன் கண்டு, சிலர் பொறாமைப்படுவர். தொழில், வியாபார நடைமுறையில், சில குறுக்கீடு வரலாம். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். உடல்நலம் சீர்பெற மனதை இலகுவாக வைத்துக் கொள்வது நல்லது.

கன்னி:
இன்று, உங்களின் நண்பர் ஒருவர் அதிகபட்ச உதவியை எதிர்பார்த்து அணுகுவார். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் கவனம், தகுந்த உழைப்பு அவசியம். போட்டி, பந்தயத்தில் ஈடுபட வேண்டாம். மனம் அமைதி பெற தியானம், தெய்வ வழிபாடு உதவும்.

துலாம்:
இன்று, உங்கள் பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். உற்சாகமுடன் பணிபுரிந்து கூடுதல் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் அளவில் வளர்ச்சி பெறும். உபரி பணவரவில் நிலுவை பணக்கடன் செலுத்துவீர்கள். உடல்நல ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் பெறும்.

விருச்சிகம்:
இன்று, உங்களிடம் பழகுகிறவர்களை மதித்து, நல்அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட உற்பத்தி, விற்பனை இலக்கு எளிதாக நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள், படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர்.

தனுசு:
இன்று, உங்களின் சிறிய பணிகளுக்கும் அதிக முயற்சி தேவைப்படும். இடையூறு செய்பவரை உணர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் சீர்பெற, புதியயுக்தி பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றுவது அவசியம்.

மகரம்:
இன்று, உங்கள் மனதில் சில குழப்பம் உருவாகலாம். நண்பரிடம் கருத்து வேறுபாடு வராமல், நிதானித்து பேசுவது நல்லது. தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியமான பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். போக்குவரத்தில் கவனநடை சிரமம் தவிர்க்கவும்.

கும்பம்:
இன்று, உங்களின் நெடுநாள் லட்சிய கனவை நிறைவேற்ற அதிக அக்கறை கொள்வீர்கள். நல்லவர்களின் உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய பரிமாணம் ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். இஷ்டதெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

மீனம்:
இன்று, உங்களின் முக்கியமான செயல் நிறைவேற தாமதம் ஆவதால் சஞ்சலம் கொள்வீர்கள். உங்கள் நலம் விரும்புவரின் ஆலோசனை தொழில், வியாபாரம் செழிக்க பயன்படும். மிதமான அளவில் பணம் கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர், பணியாளர்களை அனுசரித்து வேலை வாங்குவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாவடையை போட்டுட்டு.. இந்தமாதிரி காரியமெல்லாம் பண்ணலாமா?? (PHOTOS)
Next post “உடலுறுப்பு தானம் செய்வீர்“ விழிப்புணர்விற்காக தம்பதிகளின் நிர்வாண போஸ்!!! (PHOTOS)