புதையல் தோண்டிய பட்டிப்பளை தவிசாளரை, விடுவித்தார் கருணா.. ஐயத்தில் பிள்ளையான்?

Read Time:2 Minute, 37 Second

Karuna_Pillayanஇலங்கையில் மிக அண்மைக்காலமாக நிலதினைத்தோண்டி புதையல் தோண்டும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதிலும் மிகவும் சுவாரசியமான வியக்கத்தக்க தவல்களும் அடங்கியுள்ளன என்றால் அது பற்றி கேழ்விப் பட்டுள்ளீர்களா? மிக அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட(பட்டிப்பளை) நாற்பதுவட்டை எனுமிடத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கு தலைமை தாங்கி வழிநாடாத்தியவர் யார் தெரியுமா? பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் த.போரின்பராஜா என்பவர். இவர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு புதையல் தோண்டும்போது தகவலறிந்த கொக்கட்டிச்சோலை பொலிசார் அவ்விடத்திற்கு விஜயம் செய்து அக்குழுவினரை கைப்பற்றிய போதுதான் இவ்விடயம் வெளிவந்தது. பிரதேச சபை தவிசாளர் TMVP கட்சி சர்ந்தவர் இவரை கைது செய்வதா விடுவதா என திண்டாடிய பொலிசார் அவரையும் சேர்த்து கைது செய்தனர்.

இவ்விடயமறிந்த TMVP கடசியின் தலைவர் சி.சந்திரகாநதன் அவர்கள் இவ்விடயத்தினை அம்பலப்படுத்தாமல் இவரை பொலிஸ் மட்டத்தில்வைத்து விடுதலை செய்ய முயற்சித்தார் அது பலனளிக்கவிலை பின்னர் தவிசாளர் மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் அவர்களுடன் இரகசியமான முறையில் தொடர்பு கொண்டு தான் ஒருவாறு பொலிசாரின் பிடியிலிந்து வெளியேறினார்.

இவ்விடயம் TMVP கட்சி தலைமைக்கு எட்டியுள்ளது என்னால் முடியாததை கருணா செய்திட்டான், நம்முடைய தவிசாளர் கருனாட ஆளோ? என்ற கேழ்விகளும் TMVP கட்சி தலைமைக்குள் எழும்பியுள்ளன.

இவ்விடயம் பொதுமக்களின் காதுகளுக்கும் தற்போது எட்டியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் இவ்வாறு தான் பல விடையங்கள் அம்பலமாகும் என மக்கள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் தங்கையூடன் குடும்பஸ்தர் நஞ்சருந்தி தற்கொலை
Next post மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் ஐவர் பலி