இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (27.02.2013)

Read Time:5 Minute, 43 Second

Raasipalan-003
மேஷம்:
இன்று, உங்களுக்கு எதிர்மறையாக செயல்படுகிற ஒருவர், நல்ல அபிப்பிராயம் கொள்கிற சூழ்நிலை உருவாகும். பெருந்தன்மையுடன், அவர்களை மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில், வியாபராத்தில் இருந்த குறுக்கீடு விலகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

ரிஷபம்:
இன்று, உங்கள் செயல்களில் நிதானமும், பாதுகாப்பு நடைமுறையும் பின்பற்றுவது அவசியம். சக தொழில், வியாபாரம் சார்ந்தவரிடம், சச்சரவு வேண்டாம். முக்கிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். ஒவ்வாத உணவு உண்ணவேண்டாம். வெளியூர் பயணத் திட்டத்தில், மாறுதல் செய்வீர்கள்.

மிதுனம்:
இன்று, பொது இடங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம், உங்களின் அருமை, பெருமை குறித்த பேச்சு வேண்டாம். தொழில், வியாபார நடைமுறையில் உள்ள, அனுகூலத் தன்மை பாதுகாப்பது அவசியம். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் காக்கும்.

கடகம்:
இன்று, உங்களின் நல்ல கருத்து நிறைந்த பேச்சு, பழகுபவர்களிடம் சிந்தனையை தூண்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, சுறு சுறுப்பாக பணிபுரிவீர்கள். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் கிடைக்கும். வாகன பயணம் இனிதாக அமையும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்:
இன்று, தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம். உங்களின் நல்ல குணம் மாறாமல் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுக்கு பயன்படுவதாக இருக்கும். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது.

கன்னி:
இன்று, உங்களின் இஷ்ட தெய்வ அனுக்கிரகத்தால், முக்கியமான காரியம் நிறைவேறும். அக்கம் பக்கத்தவர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம்:
இன்று, நன்றி மறந்த சிலரது செயலை நினைத்து, மனம் வருந்த நேரிடலாம். தொழில், வியாபாரம் செழிக்க, கூடுதல் முயற்சியுடன் பணிபுரிவது அவசியம். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். நிர்ப்பந்த பணக்கடனில், ஒரு பகுதியை செலுத்துவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு செய்வதால், மனதில் சாந்தம் உருவாகும்.

விருச்சிகம்:
இன்று, உங்களின் வெளிவட்டார பழக்கத்தினால், நன்மை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவர். தொழில் வளர்ச்சி திருப்திகரமான முன்னேற்றம் பெறும். தாராள பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு:
இன்று, உங்களின் நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேறி பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பணப்பரிவர்த்தனை நல்ல முன்னேற்றம் பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு தாமதமான சலுகைப்பயன் எளிதாக வந்துசேரும்.

மகரம்:
இன்று, உங்களின் எதிர்கால நலன் பற்றிய அக்கறை கொள்வீர்கள். புதிய திட்டங்களை முன் யோசனையுடன் உருவாக்குவது அவசியம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். பிறர் பார்வையில், அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். தாயின் அன்பு, ஆசி மனதுக்கு நம்பிக்கை தரும்.

கும்பம்:
இன்று, உங்கள் உடல் நலத்தில், தகுந்த அக்கறையுடன் செயல்படுவது அவசியமாகும். முக்கியமான செயல் நிறைவேற்றுவதில், தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் சீர் பெற, நண்பரால் உதவி உண்டு. பணவரவு குறைந்த அளவில் இருக்கும். நண்பருடன் வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

மீனம்:
இன்று, உங்கள் நலன் சிறக்க, முன்னர் உதவிய நல்லவரை சந்திப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க, கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யூடியூபில் சக்கைபோடும் ஒபாமாவின் மனைவியின் டான்ஸ் நிகழ்ச்சி!!! (VIDEO)
Next post பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தில் கனடா உறுதி