சுவிஸ் நாட்டில் தொழிற்சாலை ஒன்றில் துப்பாக்கி சூடு :3பேர் பலி

Read Time:3 Minute, 23 Second

ANI.Pistrol.6சுவிட்சர்லாந்தில் ‘canton  Lucerne’  நகரில்  உள்ள மரப்பொருட்கள் தயாரிக்கும்  தொழிற்சாலையில்  நீண்ட  வருடங்களாக  வேலை பார்க்கும்  ஒருவர், அங்கிருந்த  restaurant க்குள் புகுந்து  நடத்திய    துப்பாக்கி  சூட்டில்……,   துப்பாக்கி   சூடு  நடத்தியவர்  உள்பட 3 பேர்   இறந்ததாகவும் 7 பேர் படுகாயம் அடைந்ததாகவும்  போலீசார்  தெரிவித்தனர்.

சுவிட்சர்லாந்தில்  உள்ள  (canton  Lucerne)  லுசர்ன்  நகர் அருகே   மரப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.  400 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். நேற்று தொழிற்சாலை கேன்டீனில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பயந்து வெளியே ஓடினர். பலர் குண்டு காயம் பட்டு சுருண்டு விழுந்தனர். தகவல் அறிந்ததும் தொழிற்சாலைக்கு போலீசார் விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் சிமோன் கோப் கூறுகையில், ‘இந்த பயங்கர சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உள்பட 3பேர் இறந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள்  நிலை  மோசமாக உள்ளது’ என்று மட்டும் தெரிவித்தார்.   (பின்திய   செய்திகளின்  படி  அவசர  சிகிச்சைக்காக   சேர்க்கப்பட்ட  இன்னுமொருவர்  இறந்ததாக தெரியவருகின்றது.)

துப்பாக்கி  சூடு  நடத்திய நபர்  எப்படி  இறந்தார், எதற்காக அப்படி செய்தார்  போன்ற  விவரங்கள்  எதுவும் தெரியவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நபர்  நீண்டநாளாக (17வருடமாக) இந்த  தொழிற்சாலையில்    ஊழியரா  வேலை  செய்பவர்  என  தெரியவருகிறது.

துப்பாக்கி சூட்டுக்கான காரணமும் தெரியவில்லை. சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான மக்கள் லைசன்ஸ் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். அமெரிக்காவை ஒப்பிடும்போது இங்கு துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறைவாகவே நடக்கின்றன. இதே நகரில் 2001ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மர்ம நபர்  பாவித்த  துப்பாக்கி Sphinx Model AT 380, manufactured by a Swiss company based in Nyon (VD).


துப்பாக்கி  பிரயோகம் செய்த நபர்  சுவிஸ் நாட்டை சேர்ந்தவர். 42வயது.  17வருடங்களாக  இச மரதொழிற்சாலையில் வேலை செய்பவர்.

துப்பாக்கி சம்பவம் நடைபெற்ற தொழிற்ச்சாலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹிஜாப் அணிய வேண்டாமென கூறி முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்
Next post எந்த நடிகரையும் காதலிக்கவில்லை: ஆண்ட்ரியா