சினைப்பர் தாக்குதலில் புலிகளின் குடும்பிமலை பொறுப்பாளர் பலி

Read Time:1 Minute, 17 Second

batticalo_+2.jpgவிடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை கோட்ட உதவி அரசியல்துறை பொறுப்பாளர் ஒருவர் சினைப்பர் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.மட்டு. திகிலிவெட்டை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் றமணிதரன் என்றழைக்கப்படும் வடிவேல் கங்காராஜன் (28 வயது) என்பவரே சினைப்பர் தாக்குதலுக்கு இலக்கானவராவார்.

நேற்று முன்தினம் காலை 9.45 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இருந்து கற்பக்கன எனும் பகுதியூடாக செல்லும் வேளையில் இனம் தெரியாத ஆயுததாரிகள் இவரை இலக்கு வைத்து சினைப்பர் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார். இவரின் சடலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருநெல்வேலியில் புலிகள் கிரனேட்வீச்சு. துப்பாக்கிச்சு10டு.; 9 பொதுமக்கள் காயம்
Next post புலிகளின் பகுதியில் கிளைமோர்த் தாக்குதல் பிரதேசசபை செயலாளர் காயம்.