ஓரின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதிக்கு ஆண் வேடமணிந்து சென்ற இளவரசி டயானா (PHOTOS)

Read Time:4 Minute, 13 Second
430_newsthumb_diaஓரினசேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதிக்கு ஆண் வேடமணிந்து சென்ற இளவரசி டயானா

பிரித்தானிய இளவரசி டயானா, ஆண் ஒருவரைப் போன்று ஆடையணிந்து கொண்டு, ஒரு பாலின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதியொன்றுக்கு ஒரு தடவை சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற டயானா 1997 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் இறப்பதற்கு 9 வருடங்களுக்குமுன்னர் – 1988 ஆம் ஆண்டில் –  பிரிட்டனின் பிரபல பாடகர் பிரெடி மேர்குரி, தொலைக்காட்சி நடிகரான கென்னி எவரெட் மற்றும் கென்னி நடிகை கிளியோ ரோகோஸ் ஆகியோருடன் மாறு வேடத்தில் ஒருபாலின சேர்க்கையாளர்களுக்கான மதுபான விடுதிக்கு சென்று வந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை கிளியோ ரெகோஸ் எழுதிய புதிய புத்தகமொன்றில் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
கென்னி எவரெட் நடித்த நகைச்சுவை தொலைக்காட்சி தொடரொன்றின் ரசிகையாக விளங்கிய இளவரசி டயானா அந்நிகழ்ச்சியில் தோன்றிய கென்னி மற்றும் நடிகை கிளியோ ரெகோஸ் ஆகியோருடனும் நட்பு கொண்டிருந்தார்.
ஒருநாள் கென்னி, கிளியோ  ரெகோஸ், பாடகர் பிரெடி மேர்குரி ஆகியோருடன் இளவரசி டயானா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை பார்த்துக்கொண்டிருந்தபோது, அன்றுமாலை என்ன நிகழ்ச்சிக்கு செல்வது என்பது குறித்து பேசப்பட்டதாம்.
வொக்ஸோல் தவறணைக்கு செல்லப்போவதாக கென்னியும் பிரெடியும் கூறினராம். அப்போது அவ்வாறான இடம் குறித்து தான் கேள்விப்பட்டதில்லை எனவும் தானும் அங்கு வர விரும்புவதாகவும் டயானா கூறியதாக கிளியோ ரெகோஸ் தெரிவித்துள்ளார்.
டயானாவை அங்கு அழைத்துச் செல்வதற்கு கென்னியும் பிரெடியும் முதலில் தயங்கியபோதிலும் டயானா அதில் உறுதியாக இருந்தாராம். இறுதியில் மாறு வேடத்தில் அவரை அழைத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாம்.
அப்போது 27 வயது பெண்ணாக இருந்த டயானா, ஜீன்ஸ், லெதர் ஜக்கெட் அணிந்துகொண்டதுடன் தலையை ஆண் போன்று சீவி தொப்பி அணிந்திருந்தார். குளிர் கண்ணாடியும் அணிந்துகொண்டார் என கிளியோ ரெகோஸ் தெரிவித்துள்ளார்.


ஆண் மொடல் ஒருவர் போன்று  அவர் தோற்றமளித்தார். மதுபான விடுதியில் ஒருவரும் சந்தேகப்படவில்லை. மதுபானமொன்றையும் டயானா வாங்கினார். 20 நிமிடங்களின்பின் நால்வரும் அங்கிருந்து திரும்பியதாக ரெகோஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரெடி மேர்குரி (1991), கென்னி எவரெட் (1995), டயானா (1997) ஆகிய மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில் கிளியோ ரெகோஸ் வெளியிட்டுள்ள தகவலுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெஷன் பக் களஞ்சியசாலை தாக்குதல், மூன்று பிக்குகள் உட்பட சந்தேகநபர்கள் விடுதலை
Next post பச்சிளம் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்திய பாதகனுக்கு சிறை