இன்றைய ராசிபலன்கள்: 03.04.2013

Read Time:8 Minute, 41 Second

jot.Rasi_Palan
மேஷம்
துடிப்புடன் காணப்படுவீர்கள். எதிரிகளின் கொட்டம் அடங்கும். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாயாரின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை

ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை

மிதுனம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். மாணவர்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்

கடகம்
பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். கன்னிப்பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக அமையும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை

சிம்மம்
ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். கன்னிப்பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பார்கள். அரசாங்க வேலைகளிலிருந்து வந்த தடைகள் நீங்கும். விருந்தினர்களின் வருகையுண்டு. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்

கன்னி
மனக்குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கைக்குறியவர்களின் ஆதரவு கிட்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கோபம் குறையும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். கன்னிப்பெண்களுக்கு காதல் கைகூடும். வயிற்றுவலி, கனவுத்தொல்லை நீங்கும். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்

துலாம்
இன்றையதினம் அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மாணவர்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

விருச்சிகம்
இரண்டுமூன்று நாட்களாக முடியாமல் இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டாநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலைக் காணப்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு, கிரே

தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

மகரம்
குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

கும்பம்
இன்றையதினம் மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப்பேசும் சூழல் அமையும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வானபழுது நீங்கும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். முன்கோபம் விலகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

மீனம்
இன்றையதினம் ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். மனக்குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரவகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல்
Next post பிக்குமாரால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்..