ஞானசார தேரரின் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பு -அமைச்சர் ஹக்கீம்

Read Time:1 Minute, 48 Second

muslim.slm-hakeemஇலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில், எச்.எம்.அஸ்ரப் இரு ஆயுதக் கப்பல்களை கொண்டு வந்ததாக பொதுபல சேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுமத்தும் குற்றச்சாட்டு, அஸ்ரப் அவர்களுக்கு செய்யும் அவமதிப்பாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார். பொதுபல சேனா அமைப்பு அண்மையில் பாணந்துறையில் நடத்திய பொதுக் கூட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஸ்ரப் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. போர் நடைபெற்ற காலத்தில் இரு கொள்கலன்களில் ஆயுதங்களை கொண்டு வந்ததாகவும் அந்த ஆயுதங்கள் தற்போது எங்கே இருக்கின்றன எனவும் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள ஹக்கீம், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். அஸ்ரப் என்பவர் நாட்டுக்கு சேவையாற்றிய உன்னதமான தலைவர்களில் ஒருவர். அவருக்கு எதிராக சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு காரணமாக முஸ்லிம் சமூகம் கவலையடைந்துள்ளதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் கடத்தப்பட்ட சொகுசு வேன் வவுனியாவில் மீட்பு
Next post உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு புளொட் கண்டனம்