மட்டக்களப்பில் விபச்சாரம், மூன்று பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது
மட்டக்களப்பில் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் மூவரையும் ஆண்கள் மூவரையும் மட்டக்களப்புப் பொலிஸார் இன்று இரவு கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு ஹோட்டல்களில் விபச்சாரம் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலையடுத்தே இன்றிரவு சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தி அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான ஆண்களில் இருவர் படையதிகாரிகள் என்றும், மற்றுமொருவர் அக்கறைப்பற்றைச் சேர்ந்த முஸ்லிம் நபரென்றும் பொலீசார் தெரிவித்துள்ளனர். கைதான பெண்களில் முஸ்லிம் பெண் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சிங்களப் பெண் கந்தளாயைச் சேர்ந்தவர் என்றும் தமிழ்ப் பெண் பருத்திச்சேனையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.