4வயது சிறுவன் 6வயது சிறுவன்மீது துப்பாக்கிச் சூடு

Read Time:1 Minute, 54 Second

515_newsthumb_gunஅமெரிக்காவின் நியூ ஜேர்ஸி எனும் நகரில் 6 வயது சிறுவன் மீது 4 வயது சிறுவன் தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தின் போது சுடப்பட்ட 6 வயதான சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியூ ஜேர்ஸியிலுள்ள குறித்த சிறுவனின் வீட்டில் எவ்வாறு துப்பாக்கி வந்தது எனவும் சிறுவன் எவ்வாறு 22 கெலிபர் ரைபல் ரக துப்பாக்கியினை பயன்படுத்த முடிந்தது எனவும் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

4வயதான சிறுவன் சுமார் 15 மீற்றர் தொலைவிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். மேலும் துப்பாக்கி சூட்டுச் சம்பம் நடைபெறுகையில் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளானர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த குடும்பத்தின் தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.

அண்மைக்காலமாக அமெரிக்க பாடசாலைச் சிறுவர்களிடையே துப்பாக்கி பிரயோகம் அதிகரித்துள்ளமையால் அங்கு இது தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுக்கும் முயற்சியில் இளவரசர் வில்லியம்ஸ்
Next post 60 வயது மூதாட்டியின் மகனை மீட்டுக் கொடுத்த பழைய சிம் காட்