இலங்கையர்களுக்கு ஆபத்தில்லை
தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதென தென்கொரிய அரசு அறிவித்துள்ளது. எனவே தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என இலங்கையில் உள்ள தென்கொரிய தூதுவர் ஜொன்ங்முன் சொய் அறிவித்துள்ளார்.
அவசரநிலை ஏற்படுமாயின் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சுமார் 25000 இலங்கையர்கள் தென் கொரியாவில் உள்ளனர். தென் கொரியாவில் உள்ள சகல வெளிநாட்டவர்களையும் அங்கிருந்து சொந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என வட கொரியா அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.