இலங்கையர்களுக்கு சிறை
இங்கிலாந்தில் சிங்களவர் ஒருவர்மீது தாக்குதல் நடத்திய இரு தமிழர்களுக்கு 07 மற்றும் 08 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெம்லெய் நகரில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12ம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் கைதான எஞ்சலோ லாசரஸ் மற்றும் சதுலிங்க சின்னவேகம் ஆகியோரின் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், குறித்த இருவருக்கும் முறையே எட்டு மற்றும் ஏழு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.