இன்றைய ராசிபலன்கள்: 19.04.2013

Read Time:7 Minute, 40 Second

jot.raasi-sun
மேஷம்
சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்

ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

கடகம்
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே

சிம்மம்
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்துச் செல்லும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதியிழப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

விருச்சிகம்
பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சகோதரர் பாசமழை பொழிவார். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்

தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே

மகரம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்
இன்று புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமாக நிலைக் காணப்படும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்

மீனம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாயின் உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீர்கொழும்பில் விபச்சார மையங்கள் சுற்றிவளைப்பு, ஐவர் கைது
Next post வவுனியா நகரசபைக்கு வழங்கப்பட்ட பொருட்கள் மாயம்