இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது -பங்களாதேஷ்
இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் சஹிதுல் ஹக் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்றுக்காலை அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் மொஹமட் சுபியர் ராமன், பங்களாதேஷ் கடற்படை அமைச்சின் உதவி செயலாளர் நசீர் அரிப் ம{ஹமுத், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் தரிக் அரிபுல் இஸ்லாம் ஆகியோர் பங்களாதேஷ் சார்பில் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
பங்களாதேஷ், இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என பங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்விவகாரப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.