மீள்சுழற்சி செய்யப்படக் கூடிய பாதணி
அமெரிக்க நிறுவனமொன்று மீள்சுழற்சி செய்யக்கூடிய பாதணிகளை தயாரித்துள்ளது. குரொக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த இப்பாதணிகளுக்கு குரொஸ்கிக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அதிக பாரமற்ற தன்மையைக் கொண்டுள்ள இப்பாதணிகள் ஓட்டத்தின் போது பயன்படுத்துவதற்கு உகந்ததென தெரிவிக்கப்படுகிறது.
எரிக் சாலிகும்பா என்பவர் சுமார் பல மாதகாலம் ஆய்வுகளை மேற்கொண்டு இப்பாதணியை தயாரிப்பதற்கான மூலப்பொருளை கண்டு பிடித்தாராம்.
அனைவரும் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தக் கூடியதும், அதேவேளை பார்வைக்கு அழகாக தென்படக்கூடியதுமான பாதணியை வடிவமைப்பதே எமது இலக்கு என எரிச் சாலிகும்பா தெரிவித்துள்ளார்.
இப்பாதணிகள் 100 சதவீதம் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடியவை எனவும் பயன்படுத்திய பாதணியை மீள்சுழற்சிக்கு வழங்கினால் இதே ரகத்தின் 2 ஆவது ஜோடி பாதணியை வாங்கும்போது கழிவு வழங்கப்படுமாம்.