மேலுமொரு தொகுதியினர் அவுஸ்திரேலியாவிலிருநந்து நாடு திரும்புகின்றனர்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்றிருந்த மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 25 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து தங்கியிருக்க இவர்களிடம் செல்லுபடியான விசா இல்லை. எனவே அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க இவர்களுக்கு சட்ட ஏற்பாடில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் 13ம் திகதி தொடக்கம் இதுவரை 1029 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதில் 819 பேர் சுய விருப்பின்பேரில் நாடு திரும்பியிருந்தனர்.