சுசந்திகாவுக்கு ஆலோசகர் பதவி
இலங்கையின் சார்பில் ஒலிம்பிக் பதக் கம் பெற்ற குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆலோசனையின் பேரில், விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இப்பதவியில் சுசந்திகாவை நியமித்துள்ளார்.
பாடசாலைகள் முதல் தேசிய மட்டம் வரை இலங்கையின் மெய்வன்மை விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு சுசந்திகாவின் சேவையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.