விடுதலைப் புலிகளுக்கு புதிய தலைவர் இல்லை! நெடியவன் அம்மானே தலைவர்” ஆதித்தன் மாஸ்டர் ஆவேசம்!

Read Time:4 Minute, 46 Second

lTTE.Nediyavan

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருப்பது, “அடிவருடி விஷமிகளில் ஏகாதிபத்திய சதிச்செயல்” என வர்ணித்துள்ளது, வெளிநாட்டு விடுதலைப் புலிகள் நெடியவன் படையணி.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நெடியவன் படையணியின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஆதித்தன் மாஸ்டர், “ஏகாதிபத்திய இலங்கை அரசின் எலும்புத் துண்டுகளுக்காக ஏங்கி நிற்கும் அடிவருடி விஷமிகள், புதிதாக ஒரு தலைவர் உருவாகியுள்ளார் என்று பரப்புரை செய்கின்றனர்.தேசியத் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட ஒரே தலைவர், நெடியவன் அம்மான் மட்டுமே.

வேறு தலைவர் உள்ளார் என்ற பேச்சுக்கே இடமில்லை.தேசியத்தலைவர் அவர்கள் தற்போது மௌனித்து உள்ளதால், அவரின் கட்டளைப்படி நெடியவன் அம்மான் அவர்கள் தமிழ் மக்களை வழிநடத்துகிறார். தேசியத் தலைவர் மௌனம் கலைக்கும் போது, அம்மான் மௌனிப்பார்” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

முன்னைய செய்தி….விடுதலை புலிகளின் புத்தம் புதிய தலைவர் அடையாளம் காணப்பட்டார்! இவர்தான் ‘டாப்’பாம்!!
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது. அதையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தின் பின்னர் ரகசியமான முறையில் புலிகளுக்கு தலைமை வகித்து வருபவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை உளவுத்துறை சர்வதேச போலிஸாருடன் இணைந்து இந்த புதிய தலைவரை கைது செய்ய முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் புதிய தலைவர், இந்தோனேசியாவில் தற்போது தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. கே.பி. எனப்படும் குமரன்பத்மநாதனின் பின்னர் விடுதலை புலிகளின் பெரிய தலைவராக குறித்த நபர் கருதப்படுகின்றார்.சீலன் என்ற பெயருடைய இந்த புதிய தலைவர் பத்து பாஸ்போட்களை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள், புலனாய்வு நடவடிக்கைள் ஆகியவற்றுடன் இவருக்கு தொடர்பு இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. பிரபாகரனின் மறைவின் பின்னர் நெடியவன் புலிகளுக்கு தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், ரகசியமான கட்டளைகளை அனைத்தும் இந்த சீலன் என்பவரே பிறப்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நெடியவன் மட்டுமல்ல, தற்போது வெளிநாட்டில் சுரேன் சுரேந்திரன், விநாயகம், பிரதமர் உருத்திரகுமாரன் என்று மொத்தம் 4 பேர் தலைவர்களாக உள்ளனர். இந்த நிலைமையில், சீலன் என்ற பெயரில் புதிதாக ஒருவரை அடையாளம் கண்டிருப்பதாக கூறி மிரள வைக்கிறார்கள்.

அதுவும் 10 பாஸ்போர்ட்டுகள் வேறு வைத்திருக்கிறாராம்! கில்லாடி தான்!புலிகளின் புதிய தலைவரை இலங்கை உளவுப் பிரிவு, சர்வதேச போலீஸ் எல்லாம் சேர்ந்து மடக்க முயற்சி செய்வதை விடுங்கள். தலைவர் சீலனை மற்ற நாலு தலைவர்களும் சும்மா விட்டு விடுவார்களா?(தாங்க முடியலப்பா!!)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பக புற்றுநோய் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தில் ஹன்சிகா!
Next post பெங்களூருக்கு காரில் கடத்தி வந்த 500 கிலோ வெடிபொருள் சிக்கியது