சமந்தாவுக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!
சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.
இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று மட்டும் கூறியிருக்கிறாராம். ஆனால், எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று அவர் கூறவில்லையாம்.
இந்த நிலையில, தனது 25வது பிறந்த நாளை கொண்டாடினார் சமந்தா. அப்போது அவருக்கு நேரில் வந்து வாழ்த்து சொன்ன சித்தார்த், விலையுயர்ந்த அன்பு பரிசு ஒன்றையும் வழங்கினாராம்.
அப்போது அவர்கள் இருவரும் ஜோடியாக விதவிதமான போட்டோக்கள் எடுத்துக்கொண்டதோடு, தனது கையால் சமந்தாவுக்கு சித்தார்த் கேக் ஊட்ட, சமந்தாவும் அவருக்கு ஊட்டி விட்டாராம்.
இந்த பிறந்த நாள் விழா ஐதராபாத்திலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றதாம்.