‘நேரம்” படத்தில் அமெரிக்கா குண்டு வெடிப்பு!!

Read Time:2 Minute, 13 Second

neram_02அமெரிக்கா குண்டு வெடிப்பை மையமாக வைத்து ‘நேரம்’ படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.

இதில் நவீன் நாயகனாகவும், நஸ்ரியா நசிம் நாயகியாகவும் இணைந்து நடித்துள்ளார்கள்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ஹா, நாசர், தம்பி ராமய்யா, ஜான் விஜய், ஆனந்த் நாக், சபரீஷ் வர்மா, ரமேஸ் திலக், ஆனந்த் சந்தரபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினிராக நாயகன் வேலை பார்க்கிறார்.

நாயகன் தன் வாழக்கையில், நேரத்தினால் சந்திக்கும் இன்னல்களை திடுக்கிடும் திருப்பங்களோடு சொல்லியிருக்கிறேன்.

நாயகன் நல்ல வேலையில் இருக்கும் போதே தங்கைக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து, தன் காதலியை கை பிடிக்க அவள் வீட்டில் சம்மதம் பெறுகிறார்.

வாழ்க்கை சந்தோசமாக போகும் போது சூறாவளியாக நுழையும் அமெரிக்காவில் குண்டு வெடிப்பினால் நாயகன் தனது வேலையை இழக்கிறார்.

வேலையில்லாத காரணத்தால் நாயகனை வெறுத்து ஒதுக்கி, நாயகியின் தந்தை நாயகிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்.

இதற்கிடையே தங்கை திருமணத்திற்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தடுமாறுகிறார்.

வட்டிராஜா நாயகனுக்கு கடைசி எச்சரிக்கை விடுக்கிறான். இப்பிரச்சினையை சமாளித்து, நாயகன் வெற்றிப் பெறுகிறாரா? என்பதை ‘நேரம்’ படத்தில் சொல்லியிருக்கிறேன் என்கிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் ஜி ஸ்பாட்…. அதிரவைக்கும் ஜி ஷாட்!!
Next post காதலியை நண்பருக்கு விருந்தாக்கிய காதலன்!!