கல்முனை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அம்பாறை, கல்முனை, பாண்டிருப்பை சேர்ந்த விஜய் என்ற மாணவர் இன்று ஆற்றில் மூழ்கி மரணமாகியுள்ளார்.அம்பாறை மத்திய முகாம் வாய்க்காலில் நீராடிய 17வயதான மாணவன் தர்மலிங்கம் விஜய் என்பவரே நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லுரியில் க.பொ.த. உயர்தரம் கணிதப் பிரிவில் கற்கும் விஜய் தனது 3 நண்பர்களுடன் இன்றுகாலை பாண்டிருப்பிலிருந்து மத்திய முகாமிற்கு நீராடச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய முகாம் வைத்தியசாலையில் விஜய் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமாகியுள்ளார்.