1.3 மில்லியன் டொலர்களை வீதியில் வீசிச் சென்ற திருடர்கள்!!

Read Time:2 Minute, 27 Second

wright6x4பொலிஸாரை திரை திருப்ப திருடர்கள் கொள்ளையடித்த 1.3 மில்லியன் டொலர்களை வீதியில் வீசிச் சென்ற பரபரப்பான சம்பவமொன்று பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. பெல்ஜியத்தின் ஷெடீல்கெம் நகருக்கு அருகேயுள்ள சிற்றூர் வழியாக 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கார் மின்னல் வேத்தில் சென்றது.

அதோடு வீதியில் யூரோ பண நோட்டுகளும் கட்டுக்கட்டாக விழுந்தன. இதை கண்டு வியந்த சிறுவர் முதல் முதியோர் வரையில் போட்டி போட்டு கையில் கிடைத்த பண நோட்டுகளை வாரி எடுத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 1.3 மில்லியன் டொலர் பெறுதியான யூரோ நோட்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இது பற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில் ஒரு ருசிகர தகவல் வெளியானது. பக்கத்து ஊரில் திருடர்கள் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் காரில் வந்திருக்கிறார்கள். இவர்களை ஒரு பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் துரத்தியிருக்கிறார். அவரை திசை திருப்பி தப்பிக்க திருடாகள் பண நோட்டுகளை வீசியபடியே சென்றிருப்பது தெரியவந்தது.

ஆனால் திருடர்களோ பிடிபடாமல் தப்பிவிட்டனர். பின்னர் போலீசார் வீடு வீடாக சென்று பணத்தை கொண்டு வந்து ஒப்படைக்கா விட்டால் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்புவோமென எச்சரிக்கை விடுத்தனர். உடனே பணம் திரும்ப வர தொடங்கியது. ஒருவர் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்து பணத்தை ஒப்படைத்தார்.

பாதிக்கும் மேல் பணம் திரும்ப வந்து விட்டதாகவும் மீதியையும் வசூலித்து திருடர்களையும் பிடித்து விடுவோம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி சம்பியன்!!
Next post அண்ணனால் கற்பழிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தும் ஏற்காத போலீஸ்! மனமுடைந்த பெண் தற்கொலை!!