மாமனார் ரஜினிகாந்தை இம்பிரஸ் பண்ணுவது எளிது: தனுஷ்!!
தனது மனைவி ஐஸ்வர்யாவை விட மாமனார் ரஜினிகாந்தை இம்பிரஸ் பண்ணுவது எளிது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக ரஞ்ச்ஹ்னா என்ற இந்தி படத்தில் நடித்துள்ள தனுஷ், அப்படத்திற்கு தானே டப்பிங் பேசி அசத்தியுள்ளார்.
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சோனம் கபூருடன் நடிக்கிறார். ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இப்படம் வரும் யூன் மாதம் 21ம் திகதி வெளியாகிறது.
இந்நிலையில் படம் குறித்தும், தனது குடும்பம் குறித்தும் தனுஷ் மனம் திறந்துள்ளார். தனது மாமனார் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவரை எளிதில் இம்பிரஸ் பண்ணிவிடலாம் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால் மனைவி ஜஸ்வர்யாவை இம்பிரஸ் பண்ணுவது கஷ்டம் என்று தனுஷ் கூறியுள்ளார்.
மனைவியை இம்பிரஸ் பண்ண இன்னும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறாராம். மேலும் தன்னுடைய லுக்கை வைத்து பெண்களை இம்பிரஸ் பண்ணுவது அவ்வளவு எளிதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Average Rating