புற்றுநோயிலிருந்து பாதுகாப்புப் பெற மார்பகங்களை இழந்த ஏஞ்சலினா ஜுலி!!
புற்றுநோய் அபாயம் காரணமாக தனது இரண்டு மார்பகங்களையும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாக பிரபல ஹொலிவூட் நடிகையான ஏஞ்சலினா ஜுலி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். 37 வயதாகும் ஏஞ்சலினா ஜுலிக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 வீதமும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 வீதமான வாய்ப்பு இருப்பதாகவு மருத்துவர்கள் கடந்த பெப்ரவரி மாதமளவில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே புற்றுநோயிலிருந்து இயலுமான வரையில் பாதுகாப்புப் பெறுவதற்காக மார்பகத்தை அகற்றும் மாஸ்டெக்டோமி அறுவை சத்திரசிகிச்சையை கடந்த பெப்ரவரியில் ஆரம்பித்துள்ளார். இச்சிகிச்சையின் மூலம் தற்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 5 வீதமாக குறைந்துள்ளாக ஏஞ்சலினா ஜுலி கூறியுள்ளார். 6 பிள்ளைகளின் தாயாகவுள்ளார் ஏஞ்சலினா ஜுலி. இதில் 3 பிள்ளைகள் தத்துப்பிள்ளைகளாகும்.
இது தவிர பல்வேறு சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். ஏஞ்சலினா ஜுலியின் தயார் 10 வருடங்களுக்கு மேலாக புற்றுநோயினால் அவதிப்பட்டு அவரது 56 வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. சோல்ட், வோண்டட், டொம் ரைடர் உள்ளிட்ட பல வெற்றிப்டங்களில் இவர் நடித்துள்ளார்.
நானும் ரௌடிதான்-அனிருத்தின் புதிய கொலவெறி- 3 படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் கொலைவெறியா அறிமுகமான திறமையான இசையமைப்பாளர் அனிருத் புதிய கொலவெறிக்கு தயாராகின்றார். சினிமாவில் தனது துறையில் பிரபல்யமானவர்கள் வேறு ஒரு துறையிலும் சாதிக்க நினைப்பார்கள். இந்த வகையில் இசையமைப்பாளராக தன்னை சிறப்பாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ள அனிருத். விரைவில் ஹீரோவாகவும் அவதாரமெடுக்கவுள்ளார். இதனை அவரே விஜய் விருது விழாவில் தெரிவித்திருந்தார்.
அனிருத் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தின் பெயர் ‘நானும் ரௌடிதான்’ என வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை போட்டோன் கதாஸ் சார்பில் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்கவுள்ளார். கொலவெறி போல அனிருத் ஹீரோவாக நடிக்கவுள்ள ‘நானும் ரௌடிதான்’ படமும் ஹிட்டாகுமா?
மடு திருத்தலத்திற்கான புகையிரத சேவை ஆரம்பம்- சுமார் 27 வருடங்களின் பின்னர் மடு மாதா திருத்தலத்துக்கான ரயில் சேவை இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மதவாச்சியிலிருந்து மடுவரைக்குமான 43 கிலோமீற்றர் கொண்ட ரயில் பாதை புனரமைப்பிற்கு 81.34 மில்லியன் டொலரை இந்திய நிறுவனமொன்று வழங்கியிருந்தது.
அநுராதபுரத்திலிருந்து ஆரம்பமான இப்புகையிரத பயணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா ,போக்குவரத்து உதவி அமைச்சர் ரோகன திஸாநாயக்க உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஆயிரக்கனக்காண பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.