எந்நேரம் ரொம்ப நல்லாயிருக்கு – நஸ்ரியா நசீம்!!

Read Time:2 Minute, 34 Second

20603-aதற்போது திரைக்கு வந்துள்ள நேரம் படத்தில் நடித்திருப்பவர் கேரள வரவு நஸ்ரியா நசீம். இதையடுத்து, ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்கா, ஆர்யாவுடன் ராஜா ராணி, தனுசுடன் நய்யாண்டி ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இவர்.

இதனால் கூடிய விரைவிலேயே கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கருதப்பட்டு வரும் ஹன்சிகாவை வீழ்த்தி விட்டு அவரது இடத்தை இந்த நஸ்ரியா பிடித்து விடுவார் என்பது கோடம்பாக்கத்தின் நம்பிக்கையாகி விட்டது.

அதனால், இப்போதே அவரை குறைவான கூலியில் புக் பண்ணி விடலாம் என்று பல படாதிபதிகள் படையெடுத்து வருகின்றனர். ஆனால், நஸ்ரியாவோ, அடுத்தபடியாக எந்த புதிய படத்தையும் இப்போது ஏற்க முடியாது என்று எஸ்கேப்பாகிக் கொண்டிருக்கிறார்.

ஏன் என்ன காரணம்? என்று கேட்டவர்களிடத்தில் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிப்பதே கஷ்டமாக உள்ளது. அதனால் நிறைய படங்களில் கமிட்டாகி விட்டால், தேவையில்லாத குழப்பங்கள் வரும். குறிப்பாக, ஒரு இரண்டு நாள் கேப் கிடைத்தாலும் அன்றைய தினத்தில் என் படத்துக்கு வந்துவிடு என்பார்கள்.

ஆக, மிஷின் வாழ்க்கையாகி விடும். என்னைப்பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் முழுமையான கவனத்துடன் தெளிவாக நடிக்க வேண்டும் என்று நினைப்பவள். அதோடு இப்போது எந்நேரமும் ரொம்ப நன்றாக உள்ளது.

அதனால், அவசரப்படாமல் படங்களில் கமிட்டானால் தென்னிந்திய அளவில் என்னால் முன்னணி நடிகையாக முடியும் என்று நினைக்கிறேன் என்று சொல்லும் நஸ்ரியா நசீமின் நடிப்பில், நேரம் படம் முதலில் திரைக்கு வந்துள்ளது. ஆனால், அவர் தமிழில் கமிட்டான முதல் படம் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வரும் திருமணம் என்னும் நிக்காதானாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்!!
Next post ”கட்” வைத்த பாவாடைகளில் இது கொஞ்சம் தனித்துவமானது !!(PHOTOS)