தனுஷுக்கு ஸ்ரீதேவியின் பாராட்டு!!
முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள இந்தி படம் ராஞ்சனா. சோனம் கபூர் ஹீரோயின். முஸ்லிம் பெண்ணுக்கும், இந்து வாலிபனுக்கும் இடையே மலரும் காதல் பற்றிய கதை. ஆனந்த் எல்.ராய் இயக்கி உள்ளார். இப்படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் ஸ்ரீதேவி பார்த்தார்.
பின்னர் அவர் டுவிட்டர் பக்கத்தில் அதுபற்றி கூறும்போது :- தனுஷ் தனது கதாபாத்திரத்தை உயிர் துடிப்போடு செய்திருக்கிறார். இயக்குனர் வழக்கம்போல் தனது பணியை நன்கு செய்திருக்கிறார்.
படமும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. பட ரிலீசை ஆவலாக எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனுஷ் மிகவும் அழகானவராக தோன்றுகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் ரசிக்க தக்க ஒரு ஹீரோவை தனுஷ் மூலமாக பார்த்தேன்.
அவர் நிஜத்தில் எப்படியோ படத்திலும் அப்படியே தோன்றி இருக்கிறார் என நடன இயக்குனர் பராகான் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.