அமெரிக்காவை தாக்குவது கடினமான காரியமல்ல:அல்கொய்தா தலைவன் சவால்!!
Read Time:1 Minute, 27 Second
ஏமன் நாட்டில் இயங்கி வரும் அரேபிய தீப கற்பத்தின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் காசிம் அல்-ரிமி அமெரிக்காவுக்கு சவால் விட்டுள்ளான். இணையதளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்ட ஒலிநாடாவில் அவன் கூளியுள்ளதாவது:- சமீபத்தில் பாஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதங்கள் ஆகியவற்றை வைத்தே அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு குளறுபடிகளை தெரிந்துக்கொள்ளலாம்.
அமெரிக்காவின் பாதுகாப்பு அவர்களின் கையில் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளலாம். அமெரிக்கா மீது தொடங்கப்பட்ட இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திவிட முடியாது. பாஸ்டனில் வைக்கப்பட்டது போன்ற வெடிகுண்டுகளை தயாரிக்க அனைவராலும் முடியும். இவ்வகை தாக்குதலை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அமெரிக்கர்களின் தூக்கத்தை கெடுப்போம். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.
Average Rating