யூடியூப் மீதான தடையை பங்களதேஷ் நீக்கியது!!

Read Time:1 Minute, 32 Second

890utybeஇன்னசன்ஸ் ஒப் முஸ்லிம் திரைப்பட சர்ச்சையை அடுத்து யூடியூப் வீடியோ இணையத்தளத்திற்கு தடை விதித்த பங்களதேஷ் நேற்று அத்தடையை நீக்கியுள்ளது. யூடியூப்பில் வெளியான இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம் திரைப்படத்தினால் முஸ்லிம் உலகில் எழுந்த பாரிய எதிர்ப்பலையைத் தொடர்ந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம், யூடியூப் இணையத்தளத்தின் மீது பங்களதேஷ் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று புதன்கிழமை யூடியூப் மீதான தடையை நீக்கியுள்ளதாக பங்களதேஷ தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்நிறுவனத்தின் பிரதான அதிகாரி சுனில் கன்டி பொஸ் கூறுகையில், யூடியூப் மீதான தடையானது, கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் போன்ற முக்கிய தேவைகளுக்காக யூடியூப்பை பயன்படுத்தும் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கின்றது. இதனாலேயே தடையை நீக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் நடைபயிற்சி மேற்கொண்ட ராணுவ வீரரின் மனைவி படுகொலை!!
Next post தேனிலவுக்கு வந்த இடத்தில் சோகம் கேரள புது மாப்பிள்ளை நீச்சல் குளத்தில் மூழ்கி பலி!!