ஐரோப்பாவிலும் டுனிஷியாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள்!!

Read Time:4 Minute, 14 Second

903topஅரை­நிர்­வா­ண­மாக ஆர்ப்­பாட்டம் செய்யும் ஐரோப்­பிய பெண்கள் குழு­வொன்றின் நட­வ­டிக்­கை­யினால் ஆபி­ரிக்க நாடான டுனி­ஷி­யா­விலும் ஐரோப்­பா­விலும் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது. உக்­ரைனை தள­மாகக் கொண்ட பெண்கள் குழு­வொன்று டொப்­லெஸ்­ஸாக வீதி­களில் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வதில் பிர­ப­ல­மா­னது. ‘பிமென் எனும் இக்­குழு தம்மை பெண்­ணி­யல்­வாத குழு­வெனக் கூறிக்­கொள்­கி­றது. இவர்­களின் அங்­கத்­த­வர்கள் பலர் வெளி­நா­டு­க­ளிலும் உள்­ளனர். இக்­கு­ழுவின் அங்­கத்­த­வ­ரான டுனி­ஷி­யாவைச் சேர்ந்த ஆமினா ஸ்போய் (ஆமீனா டெய்லர்) எனும் பெண் டொப்லெஸ் புகைப்­ப­ட­மொன்றை பேஸ்புக் இணையத் தளத்தில் வெளி­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

அதனால் அப்பெண் டுனி­ஷிய பொலிஸாரால் கைது செய்­யப்­பட்டார். அதை­ய­டுத்து, ஐரோப்­பா­வி­லுள்ள ‘ஃபிமென்’ குழு அங்­கத்­த­வர்கள் கிளர்ந்­தெ­ழுந்­தனர். அக்­கு­ழுவின் பிரான்ஸைச் சேர்ந்த பெண்கள் இருவரும் ஜேர்­ம­னியைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும் டுனி­ஷி­யா­வுக்கே சென்று அந்­நாட்டின் பிர­தான நீதி­மன்ற கட்­டடத் தொகு­தியின் முன்னால் டொப்­லெஸ்­ஸாக ஆர்ப்­பாட்­டதில் ஈடு­பட்­டனர். அரபு நாடொன்றின் இந்­த­ளவு பகி­ரங்­க­மாக டொப்லெஸ் பெண்­களின் ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றமை இதுவே முதல்­த­ட­வை­யாகும். டுனி­ஷியா பொது­மக்கள் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்து இந்த ஆர்ப்­பாட்­டத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்த நிலையில் அப்­பெண்­களும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டனர்.

அதை­ய­டுத்து இக்­கை­து­க­ளுக்கு எதி­ராக ஐரோப்­பிய நாடு­க­ளிலும் மேற்­படி குழுவைச் சேர்ந்த பெண்கள் வீதி­களில் டொப்லெஸ் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்­றனர். அமீனா டெய்லர் மற்றும் கைது செய்­யப்­பட்ட ஐரோப்­பிய பெண்கள் மூவ­ருக்கு எதி­ரான வழக்கு நேற்­று­முன்­தினம் விசா­ரிக்­கப்­பட்­ட­போது, பிரான்ஸின் தலை­நகர் பாரி­ஸிலும் பெல்­ஜியத் தலை­நகர் பிர­சல்­ஸிலும் உள்ள டுனி­ஷிய தூத­ர­கங்­க­ளுக்கு முன்­பாக பெண்கள் பலர் டொப்லெஸ் ஆர்ப்­பாட்­டத்­தில் ­ஈ­டு­பட்­டனர்.

ஆனால் அன்­றைய தினம் தன் மீதான வழக்­குக்­காக டுஷி­னிய நீதி­மன்­றத்­திற்கு அழைத்­து­வ­ரப்­பட்ட நீதி­மன்றில் ஆஜ­ரான ஆமினா டெய்­லரும் ஏனைய பெண்கள் மூவரும் டுனி­ஷிய பெண்­களின் பாரம்­ப­ரிய பாணியில் ஆடை அணிந்­தி­ருந்­தனர். இப்­பெண்­க­ளுக்கு எதி­ரான வழக்கில் தாமும் இணைந்­து­கொள்­வ­தற்­காக இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­களை தாம­தப்­ப­டுத்­து­மாறு டுஷினியாவிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதேவேளை, டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக டுனிஷியாவுக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பெண்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் முதலாளிக்கு ‘சூனியம்’ இந்தியர் கைது!!
Next post கடவுளின் குளியல் தொட்டி கண்டுபிடிப்பு!!(PHOTOS)