முருகதாஸ் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா…!!

Read Time:1 Minute, 59 Second

ftf02

சின்னத்திரையில் அசத்தி கொண்டிருந்த சிவகார்த்திகேயனை “மெரினா” படத்தின் மூலம் ஹீரோவாக மாற்றியவர் டைரக்டர் பாண்டிராஜ். தொடர்ந்து “மனம் கொத்தி பறவை”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “எதிர்நீச்சல்” என்று நடித்து குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

தற்போது சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தப்படியாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை முருகதாஸ் தயாரிக்க மட்டுமே செய்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். பக்கா காமெடி படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து ஹன்சிகா கூறியுள்ளதாவது, இயக்குனர்முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படத்தின் கதையும் திரைக்கதையும் என்னை மிகவும் கவர்ந்தது, இது ஒரு முழு நீள காமெடி படம்.

இப்படத்தின் கதாநாயகனாக சிவா கார்த்திகேயன் நடிக்க உள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெரும் என்பதில் சந்தேகமே இல்லை, இப்படத்தின் படபிடிப்புக்காக ஆவலோடு காத்துதிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவ்வருடத்தில் பலத்த வரவேற்ப்பைப் பெற்ற ஆபாச விளம்பரங்கள் (வீடியோ)
Next post 2 குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை!!