உலகின் இறுதி ஐஸ் வியாபாரி : மனதை உருக வைக்கும் குறுந்திரைப்படம் (வீடியோ)

Read Time:2 Minute, 1 Second

The Last Ice Merchantபனி மலைகளிலிருந்து, ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து வர்த்தகம் செய்யும் முறை 19ம் நூற்றாண்டுடன் வழக்கொழிந்துவிட்டது.

இராசயன முறையில் பனிக்கட்டிகளை இலகுவாக இப்போது உருவாக்கிவிடலாம் என்பதனால் இத்தூய பனிக்கட்டிகளை வாங்கக் கூட எவரும் இப்போது முன்வருவதில்லை.

The Last Ice Merchant (இறுதி ஐஸ் வியாபாரி) எனும் தொனிப்பொருளில் எகுவடோர் நாட்டைச் சேர்ந்த 67 வயதான பல்ட்டாஸார் உஷ்ச்சா என்பவரை பெற்றி உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி குறுந்திரைப்படம் இது.

வாரத்திற்கு இரு முறை என ஐம்பது வருடங்களுக்கு மேலாக பனிக்கட்டிகளை வெட்டி எடுத்து வர்த்தக வியாபாரம் செய்கிறார் இவர். இவரது சகோதரர்கள், குடும்பத்தினர் என அனைவரும் இத்தொழிலிலிருந்து பல்வேறு காரணங்களால் பின்வாங்கிவிட, என் இறுதி உயிர் மூச்சு இருக்கும் வரை எனது பாரம்பரியத் தொழிலை நான் செய்வேன் என்கிறார் இவர்.

எகுவடார் நாட்டின் அழகிய ஐஸ் மலைப் பகுதிகளையும், இவரது முயற்சியையும் ஒன்றுசேர படம்பிடித்து உருவாக்கப்பட்ட இக்குறுந்திரைப்படத்தை நீங்கள் பார்த்து முடிக்கும் போது நிச்சயம் உங்களது குடும்பத்திலும், உங்கள் மூதாதையர் செய்துவந்த பாரம்பரியத் தொழில்களும், இப்போது அவை என்னென்ன காரணத்தினால் வழக்கொழிந்து விட்டன என்ற நினைவுகளும் உங்கள் கண் முன்னே தோன்றி மறையலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்…: சிங்காரச் சென்னை விபத்துக்களின் நகரமா?(PHOTOS)
Next post காதலியின் 82 வயதான தந்தையின் ஆணுறுப்பை அறுத்த காதலன் !!