அமெரிக்க முதலாளியைப் பிணைக்கைதியாக வைத்திருந்த சீனர்கள்!!

Read Time:2 Minute, 20 Second

d8e48df6-640b-4fac-940c-454a6961ca7e_S_secvpfசிப் ஸ்டேன்ஸ் என்ற அமெரிக்கர், ப்லோரிடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கோரல் ஸ்ப்ரிங்ஸ் என்ற சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின், பீஜிங் நகர பிரிவில் இணை முதலாளியாக செயல்பட்டு வந்தார். பீஜிங் பிரிவில் வேலை செய்துவந்த சீனத் தொழிலாளிகள், மற்றொரு பிரிவில் வேலை செய்துவந்த தொழிலாளர்களுக்கு அளித்தது போல் தங்களுக்கும் ஊதிய உயர்வு தரவேண்டும் என்று, அவரை இருப்பிடத்தை விட்டு வெளியே வரவிடாமல் வைத்துள்ளனர்.

வெளியில் வரும் வழிகளில் எண்பதுக்கும் மேற்பட்டோர் வழியை அடைத்துக்கொண்டும், அவர் தூங்க முயன்றபோது விளக்கு வெளிச்சத்தினை அவர்மீது அடித்து தூங்க விடாமல் செய்தும், ஜன்னல்களைப் படபடவென்று தட்டி சப்தம் எழுப்பியும் தொந்திரவு செய்துள்ளனர். தலைநகருக்கு வெளியே இயங்கிவந்த அவரது, பத்து வருடங்களான தொழிற்சாலையை ஆய்வு செய்யவந்த அதிகாரிகளும் தொழிலார்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி தன்னை வற்புறுத்தியதாக அவர் கூறினார்.

மீதமுள்ள 100 தொழிலாளர்களும் வேலைநீக்கம் செய்யப்படவில்லை என்று தான் எடுத்துக் கூறியும் அதனை அவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்றார். இன்று தங்களுக்கு அந்த உயர்வுகள் குறித்த மாறுதல்கள் தெரிவிக்கப்படவேண்டும் என்று அந்தத் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறும் சிப், தான் அவர்களுடைய பொறியில் சிக்கிய விலங்கு போல் உணருவதாக முதல் மாடியில் உள்ள அவருடைய அலுவலக ஜன்னல் வழியே செய்தியாளர்களிடம் நேற்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெல்ஜியம் நாட்டு பிரதமரின் வாகனத்தை இடைமறித்து நிர்வாணப் பெண்கள் ஆர்ப்பாட்டம்!!(PHOTOS)&(VIDEO)
Next post முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட கோட!!