தள்ளிப்போகுது தங்க மீன்கள்..!!

Read Time:1 Minute, 57 Second

download (22)

கவுதம் மேனன் தயாரிப்பில், “கற்றது தமிழ்” ராம் இயக்கி உள்ள “தங்க மீன்கள்” படம் நீண்ட நாள் ரிலீசாகாமல் வெயிட்டிங்கிலேயே இருக்கிறது. படம் எடுத்து முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் பல்வேறு காரணங்களால் இதுவரை ரிலீசாகவில்லை. ஒரு வழியாக எல்லா பிரச்னைகளும் முடிந்து சமீபத்தில் இதன் டிரைலர் ரிலீசானது, அது அனைவரையும் கவர்ந்தது. தந்தை-மகள் உறவை நுணுக்கமாக சித்தரிக்கும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.

வருகிற 26ந் தேதி படம் வெளிவருவதாக தொடர்ந்து விளம்பரம் செய்து வந்தார்கள். தற்போது பட ரிலீசை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்து விட்டார்கள். 26ந் தேதி “பட்டத்துயானை”, “சொன்னா புரியாது” படங்கள் ரிலீசாகுது. “பட்டத்துயானை” மைக்கேல் ராயப்பன் படம், “சொன்னா புரியாது” ராம நாராயணன் வெளியிடும் படம். இருவருமே பவர்புல் புரட்யூசர்கள். இரண்டு படமும் 500 தியேட்டருக்கு மேல் ரிலீசாகுது. அதனால் “தங்கமீன்கள்” படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை, அப்படியே கிடைச்சாலும் காலைக்காட்சி, பகல்காட்சிகள் தான் கிடைத்ததாம். அதனால் படத்தை ஆகஸ்ட் மாத்திற்கு தள்ளி வைத்து விட்டார்கள். இதே போல ஜூலை 26ல் வெளிவருவதாக இருந்த வேறு சில படங்களும் ரிலீசை தள்ளி வைத்துவிட்டடாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2ஆம் உலக யுத்த பீரங்கிகளால் உருவாக்கப்பட்ட ஜிம்..!!
Next post டுவிட்டரில் நடிகைகள் பற்றி அவதூறு: நடிகை குஷ்பு ஆவேசம்..!!