படுகாயமடைந்த நடிகை மஞ்சுளா மரணம்..!

Read Time:2 Minute, 3 Second

images (1)நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா (59) கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்துள்ளார்.

நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து நடிகைகள் குஷ்புவும், ராதிகா சரத்குமாரும் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, குஷ்பு: மஞ்சுளா ஆன்ட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும். என்னைப் பொருத்த வரை நீங்கள் தான் அழகான பெண். லவ் யூ சோ மச்.ராதிகா: மஞ்சுளா விஜயகுமார் அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இன்று உங்களைப் பார்த்த பிறகு நாம் ஒன்றாக இருந்த நேரங்கள் மற்றும் உங்களின் அன்பு நினைவுக்கு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூர்யாவின் 38 ஆவது பிறந்த தினம்..!
Next post நடிகைகளின் கவர்ச்சி படங்கள்…