By 26 July 2013 0 Comments

என்னால முடியலங்கை.. மாடி ஏற முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் ‘குண்டர்..!

24-1374651838-ritchiedoyle-600-jpgஅயர்லாந்தைச் சேர்ந்த 44 வயதான ரிட்சி டோயில் என்பவர் தனது உடல் எடையால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்.

தனது சொந்த வீட்டில் படுத்துத் தூங்கக் கூட அவரால் முடியவில்லை. அதாவது வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை. காரணம், பல மாடிப் படிகளை ஏறிக் கடக்க முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.

நடந்து நடந்து காலெல்லாம் புண்ணாகி பார்க்கவே படு பரிதாபமாக இருக்கிறது இவரது நிலை.அந்த பரிதாபத்துக்குரியவரின் பெயர் ரிட்சி டோயில். 44 வயதாகும் இவர் பான்ட்ரி என்ற ஊரில் வசித்து வருகிறார்.

தனக்கு கீழ்த்தளத்தில் ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுக்குமாறும் அவர் நகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

படியே இல்லாத வீடாக இருந்தால் ரொம்பப் புண்ணியமாகப் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் இல்லாமல் முடியாது 1,7 ஆக்சிஜன் இல்லாமல் முடியாது கொஞ்சம் கூட இவரால் நடக்க முடியாதாம். அப்படியே நடந்தாலும் உடனே ஆக்சிஜன் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமாம்.

24-1374651838-ritchiedoyle-600-jpg



Post a Comment

Protected by WP Anti Spam