இந்தோனேசிய படகு விபத்து தொடர்பில் நால்வர் கைது..!!

Read Time:1 Minute, 52 Second

download (1)இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு இம்மாதம் 23 ஆம் திகதியன்று ஜாவாத் தீவு கடற்பரப்பில் வைத்து விபத்துக்குள்ளானதில் இலங்கையர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் பலியானர்.

6 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 15 அகதிகளே உயிரிழந்தனர். இதில் இரு பெண்களும் குழந்தை ஒன்றும் இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த இந்தோனேசிய பொலிஸார் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் இந்தோனேசியாவை சேர்ந்த நான்கு நபர்களை வெள்வேறு நகரங்கில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவ் விபத்தின் போது 200 பேர் வரை படகில் இருந்ததாக பொலிஸார் அறிவித்த போதும் படகில் 250 பேர் இருந்ததாக புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sunken-asylum-seeker-boat-off-West-Java-PICS

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வாதிகாரப் போக்கில் கூட்டமைப்பு : அரசாங்கம் குற்றச்சாட்டு..!!
Next post பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியது; சர்வதேசத்தையும் குற்றஞ்சாட்டுகின்றது அமெரிக்க அறிக்கை..!!