பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியது; சர்வதேசத்தையும் குற்றஞ்சாட்டுகின்றது அமெரிக்க அறிக்கை..!!

Read Time:3 Minute, 0 Second

download (3)பாதுகாப்பதற்கான பொறுப்பு (ஆர் 2 பீ) என்ற கோட்பாட்டைப் பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்காவை வலியுறுத்தியிருக்கும் அமெரிக்காவின் உயர் மட்ட அறிக்கை ஒன்று இலங்கையில் இறுதிக்கட்டப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அது தொடர்பிலான சர்வதேசத்தின் அணுகுமுறையையும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மெடலின் அல்பிறைட், சூடானுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் தூதுவர் றிச்சர்ட் வில்லியமஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றிலேயே இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வாஷிங்டனில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைப் போர் தொடர்பில் இந்த அறிக்கையில் விஷேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “பாரிய அளவில் பொதுமக்களின் இழப்புகள் ஏற்பட்ட நிலையிலும், அக்கறை தெரிவித்து அறிக்கைகளை வெளியிடுவதற்கு அப்பால் சர்வதேச சமூகம் எதனையும் செய்யவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை, மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயம், மற்றும் ஐ.நா.பொதுச் சபை என்பன இந்தக் காலப்பகுதியில் இலங்கை தொடர்பான உத்தியோகபூர்வ அமர்வுகள் எதனையும் நடத்தவும் இல்லை’ என இந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது.

மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்படுவது தொடர்பில் தகவல்கள் கிடைத்த போதிலும் உரிய நேரத்தில் செயற்படவேண்டிய தமது பொறுப்பை சர்வதேச சமூகம் தட்டிக்களிக்கும் வகையிலேயே செயற்பட்டது. போர் முடிவுக்கு வந்த பின்னர் பாரியளவிலான பொதுமக்களின் கொலைகளோ அல்லது போர்க் குற்றங்களோ இடம்பெறவில்லை என அரசாங்கம் மறுத்தது.  மனிதாபிமானத்துக்கு எதிரான கொலைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கும் தடை போட்ட அரசாங்கம் இது தொடர்பில் தாமே விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அறிவித்தது எனவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசிய படகு விபத்து தொடர்பில் நால்வர் கைது..!!
Next post இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..!!