By 29 July 2013 0 Comments

47 வயது இளமைப் பெண் சத்திரசிகிச்சை மூலம் வயதான தோற்றத்தை அடைய ஆவல்..!!

1414article-2379131-1B01DBE1000005DC-8_306x589நம்மில் பல­ருக்கும் 30 வய­தாகும் போதே வய­தா­வ­தற்­கு­ரிய அறி­கு­றிகள் அத்­த­னையும் ஆரம்­பித்­து­விடும். இள­மை­யாக தோன்­று­வ­தற்கு பலர் எத்­த­னையோ முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர்.

ஆனால், இங்­கி­லாந்தைச் சேர்ந்த ஆன் போல்டன் பாட்­டி­யா­கி­விட்ட நிலை­யிலும் கூட சத்­திர சிகிச்­சைகள் எது­வு­மின்றி தொடர்ந்தும் இயற்­கை­யா­கவே இளமை மாறாது உள்ளார்.

இருப்­பினும் 47 வய­திலும் மிக இள­மை­யான தோற்­றத்தில் இருப்­பதால் வாழ்க்­கையில் பல இழப்­புக்கள் ஏற்­ப­டு­வ­தாக அவர் கூறு­கிறார்.. எனவே தான் வய­தா­ன­வ­ராக தோற்­ற­ளிப்­ப­தற்­காக முகத்தில் சுருக்­கங்­களை ஏற்­படும் வகையில் சத்­தி­ர­சி­கிச்­சை­களை மேற்­கொள்ள விரும்­பு­வ­தாக போல்டன் தெரி­வித்­துள்ளார்.

இங்­கி­லாந்தின் பிரிஸ்டல் நகரில் வசிக்கும் இப்பெண் 4 பிள்­ளை­களின் தாயாவார். இவ­ரது மூத்த மக­னுக்கு அண்­மையில் குழுந்தை ஒன்று பிறந்து பாட்­டி­மா­கி­விட்டார் ஆன் போல்டன்.

இன்னும் இள­மை­யாக இருக்கும் 47 வய­தான போல்டன், 20 இளம் மங்கை போலவே தோற்­ற­ம­ளிக்­கின்றார். ஆனால்   அதை வர­மாக கரு­தாமல் தொல்­லை­யா­கவே அவர் கரு­து­கிறார்.

தனது இள­மைத்­தோற்றம் கார­ண­மாக கண­வரும், காதலர்­களும் தன்­னை­விட்டு பிரிந்­து­விட்­ட­தாக அவர் கூறு­கிறார்.

​ஆன் போல்டன் தனது24 வயதில்   முதல் தட­வை­யாக திரு­மணம் செய்­து­கொண்டார். அவ­ரு­டைய இளமை கார­ண­மாக அடுத்த சில வரு­டங்­க­ளி­லேயே போல்­டனின் திரு­மண வாழ்க்கை முடி­வுக்கு வந்­துள்­ளது.

இது குறித்து அவர்  கூறு­கையில், ‘திரு­ம­ண­மா­கிய சில வரு­டங்­களின் பின்னர் நான் இள­மை­யா­கவே இருக்க எனது கணவர் வய­தா­ன­வ­ராக தெரிந்தார். ஆனால் எங்கள் இரு­வ­ருக்கும் ஒரே வய­துதான்.

இதனால் நான் வய­தா­ன­வ­ராக தோற்­ற­ம­ளிக்கும் ஆடை­க­ளையே அணிந்தேன். இருந்தும் எங்­க­ளது திரு­மண வாழ்க்கை முடிந்­து­விட்­டது’ என்றார்.

இவர்­க­ளுக்கு ஆர்தர் (தற்­போது 25 வயது),  கெவின் (தற்­போது 19 வயது) குழந்­தைகள் பிறந்­துள்­ளன.

இதன் பின்­னரும் போல்டன் மற்­று­மொ­ரு­வ­ருடன் திரு­மணம் செய்­யாது குடும்பம் நடத்­தி­யுள்ளார். இதன்­போது மேலும் இரண்டு குழந்­தை­க­ளுக்கு தாயா­கி­யுள்ளார். ஆனால் இக்­கு­டும்ப வாழ்க்­கையும் நீண்ட காலம் நீடிக்­க­வில்லை. இப்­பி­ரி­வுக்கும் காரணம் போல்­டனின் இள­மையே.

இனி காதல் கொள்­வ­தில்லை என்­றி­ருந்த போல்­டனின் வாழ்க்­கையில் அவ­ருக்கு 32 வய­தாக இருக்கும் போது 42 வய­தான ஆணொ­ருவர் மீண்டும் நுழைந்­துள்ளார். இவர் ஆரம்­பத்தில் போல்­டனின் இளமை பற்றி கவலை கொள்­ள­வில்லை. பின்னர் இவ­ருக்கும் போல்­டனின் இளமை பிரச்­சி­னை­யாக அமைய போல்­ட­னை­விட்டு பிரிந்­துள்ளார்.

இந்த காதல் குறித்து போல்டன் கூறு­கையில், நானும் எனது கடைசி வாழ்க்கைத் துணையும் இணைந்­தி­ருந்தால் பார்ப்­ப­வர்­களால் எனது கண­வராக அவரை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. இதனால் அவரை அசிங்­க­மான கிழவன் என்று கூட அழைத்­தி­ருக்­கி­றார்கள். எனவே மீண்டும் பழைய வாழ்க்கைக் திரும்­ப­வேண்­டி­ய­தா­யிற்று.

எல்­லோரும் இளமையாக இருக்க விரும் புவார்கள் ஆனால் எனது வாழ்க்கையில் இழப்புக்களை ஏற்படுத்திய இந்த இளமை தோற்றத்திலிருந்து விடுபட்டு வய தான தோற்றத்தை பெற சத்திரசிகிச்சை மேற்கொள்ள விரும்புகிறேன். இதனை வேடிக்கையாக கூறவில்லை’ எனத் போல் டன் தெரிவித்துள்ளார்.
1414article-2379131-1B01DBE1000005DC-8_306x589

1414ggfgfgPost a Comment

Protected by WP Anti Spam