வங்காளதேசத்தில் கலவரம்: வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் காயம்..!!

Read Time:2 Minute, 35 Second

18187388-0e6e-42e9-820c-f1931836631a_S_secvpfதேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிக்கு விதித்த தடையை எதிர்த்து வங்காள தேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியான ஜமாத் கட்சியின் அங்கீகாரத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட அக்கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதவாத கட்சி என்பதால் வங்காளதேச அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத் கட்சியினர் நேற்று 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை வெடித்தது.

அக்கட்சியின் மாணவர் அணியினர் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. மதுக்கலவையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 15 குண்டுகள் வெடித்ததால் ரான்ஷாகி, பாரிசால், போக்ரா, சிட்டகாங் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரோடுகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு மறியல் போராட்டமும் நடந்தது. 34 வாகனங்கள் எரிப்பு

கோமில்லா, ராஷ்ரொகி, பிரோன்பூர், சிட்டகாங் உள்ளிட்ட இடங்களில் 34 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வன்முறை மற்றும் கலவரங்களை அடக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் மீது கலவரக்காரர் கள் கற்கள் மற்றும் தடிகளை வீசி தாக்கினார்கள். அதில் 19 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

கலவரக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 40 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொன்டேறாவின் நியூஸிலாந்து தலைவர் இராஜினாமா..!!
Next post ஆப்கானிஸ்தானில் பெண் எம்.பி.யை கடத்திய தலிபான் தீவிரவாதிகள்..!!