மனிதன் பறக்கும் உடை தயாரிப்பு..!!

Read Time:3 Minute, 6 Second

a1ebf2c0-39e6-4333-8236-9ca483229bf5_S_secvpfவிண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகாப்டர், கியாஸ் பலூன், ராக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின.

தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி தானாகவே வானில் பறக்கும் யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.75 லட்சம் செலவில் விசேஷ உடை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை நியூசிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் வடிவ மைத்துள்ளனர். பறக்கும் விசேஷ உடை 2 சிலிண்டர் களை கொண்டது. அதில் முன்னோக்கி தள்ளக்கூடிய காற்றாடிகள் உள்ளன. அவை கார்பன் இழையால் ஆன சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சட்டையை வானில் பறப்பவர் முதுகில் மாட்டிக் கொண்டு அதில் உள்ள பட்டை வாரினால் இறுக கட்டிக் கொள்ள வேண்டும். பறக்கும் போது அதில் உள்ள 2 கைப்பிடிகளை செல்லும் திசைக்கு தக்கபடி மாற்றிக் கொள்ள முடியும்.

இதன் மூலம் மணிக்கு அதிகபட்சமாக 74 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். 30 கி.மீட்டர் தூரத்தை 30 நிமிடத்தில் சென்றடையலாம். 330 கிலோ எடையை தூக்கி செல்லலாம்.

இந்த பறக்கும் உடை கிளன் மார்டின் என்பவரின் முயற்சியால் உருவானது. நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் நகரை சேர்ந்த இவர் கடந்த 1980–ம் ஆண்டில் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்.

அவர் தனது குழந்தை பருவத்தில் டி.வி.யில் ஒளிபரப்பாகிய ‘தண்டர்பர்ட்ஸ்’, ‘லாஸ்ட் இன் ஸ்பேஷ்’ போன்ற சாகச நிகழ்ச்சிகளை பார்த்து அதன் மூலம் ஆர்வம் ஏற்பட்டு இந்த முயற்சியை மேற் கொண்டனர். அவரது கனவு தற்போது தான் நனவாகி உள்ளது.

அதிநவீன பறக்கும் உடையின் மதிப்பு ரூ.75 லட்சம். இதை மாட்டிக் கொண்டு பறக்க நியூசிலாந்தின் விமான நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இது அடுத்த ஆண்டு (2014) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

தொடக்கத்தில், ராணுவ வீரர்கள், விமான ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு என விசேஷமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. சாதாரண வடிவில் தயாரிக்கப்படும் பறக்கும் உடை 2015–ம் ஆண்டில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3300 அடி உயரத்தில் சாகசம்..!!
Next post நடுவானில் விமானத்தில் பிறந்த ‘குட்டிப்பையன்..!!