நான் பெண் புலியல்ல – நவீபிள்ளை..!!
எனது இந்திய, தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையிலுள்ள ஊடகங்கள், அமைச்சர்கள், வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் செய்வோர் பலவருடங்களாக என்னை புலிகளின் கையாள் என கூறியுள்ளனர்.
‘நான் புலிகளிடமிருந்து சம்பளம் பெறுவதாகவும் அவர்கள் கூறினார். ஐ.நாவிலுள்ள பெண் புலி என்றனர். இது தவறானது மட்டுமன்றி மனதை நோக்கடிப்பதாகும்.’என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.