நவநீதம்பிள்ளைக்கே சவால் விட்ட பாதுகாப்புச் செயலர்..!!
வடக்கிலுள்ளவர்கள் காணாமற் போயுள்ளனர் என பாதுகாப்புத்தரப்பு மீது குற்றஞ் சுமத்துபவர்கள், காணாமற் போனோர் என எவரும் இருந்தால் அவர்களது பெயர்ப் பட்டியலைத் தம்மிடம் தரலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு பெயர்ப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டால் அதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் நேற்று முன்தினம் இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்புகள் கூறும் அளவுக்கு 40 ஆயிரம் பேர் காணாமற்போயுள்ளனர் என்பதை நிராகரித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், யுனெஸ்கோ, செஞ்சிலுவைச் சர்வதேச சங்கம் உள்ளிட்ட பல்பேறு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் இதுபோன்ற தகவல்கள் வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.