மாணவிகளின் அந்தரங்கங்களை படம்பிடித்த ஆசிரியருக்கு விளக்கமறியல்..!!
கழிவறையில் கெமராவைப் பொருத்தி தன்னிடம் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவிகளை இரகசியமாக பார்த்து வந்த ஆசிரியரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி அனுராதபுர மேலதிக மஜிஸ்திரேட் தம்மிக ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.
காலிங்க நிலந்த என்ற குறித்த நபர் மலசலகூடத்தில் கெமராவினை பொருத்தி தன்னிடம் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவிகளின் அந்தரங்கங்களை அவதானித்து வந்துள்ளார்.
இவரைப் பொலிஸார் கைதுசெய்த போது காட்சிகள் அடங்கிய மெமரி கார்டினை இவர் அழித்துவிட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.