சவுதி அரேபியாவில் தங்கியுள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!!
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு நாட்டுக்கு திரும்புவதற்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலம் நவம்பவம் மாதம் 4ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 8 ஆயிரம் பேருக்கு, இலங்கை திரும்ப சவுதி அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ள போதிலும் அவர்களில் அரைவாசிக்கும் குறைந்த அளவினரே நாடு திரும்பியுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ள நவம்பர் 4ஆம் திகதிக்கு பின்னர் சவுதியில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படுவதுடன், 30 லட்சம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.