மொனாக்கோ இளவரசியின் விழிப்புணர்வு பிரசாரம்..!!
மொனாக்கோ இளவரசி சார்ளீன், தெற்கு பிரான்ஸிலுள்ள கப்ரிதன் கடற்கரையில் அண்மையில் நீரியல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
கடலில் நீந்தும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அக்கடற்கரையில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் மற்றும் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்தவர்கள்,
பாடசாலை மாணவர்கள் முதலானோருக்கு இளவரசி சார்ளீன் எடுத்துக்கூறினார். நீர்ச் சறுக்கல் விளையாட்டிலும் அவர் ஈடுபட்டார்.
35 வயதான சார்ளீன் தென்னாபிரிக்காவின் புகழ்பெற்ற நீச்சல் வீராங்கனையாவார். சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சார்ளீன் பங்குபற்றிய அணி 5 ஆவது இடத்தை பெற்றது. பல்வேறு சர்வதேச நீச்சல் போட்டிகளில் அவர் சம்பியனானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டு அவர் பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள சிறிய இராஜ்ஜியமான மொனாக்கோவின் இளவரசர் இரண்டாம் அல்பர்ட்டை திருமணம் செய்துள்ளார்.
Average Rating