கச்சத்தீவை நீண்ட கால குத்தகைக்கு எடுப்பதே சிறந்த தீர்வு – ஞானதேசிகன்..!!

Read Time:1 Minute, 55 Second

1669396056imagesகச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய அரசு, தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால் தமிழர்களுக்கு பாதகம் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஞானதேசின் கூறியுள்ளார்.

கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய அரசு, தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என்று ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சத்தீவை நீண்ட கால குத்தகைக்கு எடுப்பதே சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதே மத்திய அரசின் நிலைபாடு என்று தெரிவித்த ஞானதேசிகன், சேது சமுத்திர திட்டத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீன தலையீடு குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கை..!!
Next post பக்கவாதத்துக்குள்ளான ஆட்டுக்கு சக்கர கதிரை வடிவமைத்த மிருகக்காட்சிச்சாலை..!!