ஈராக்கில் ஷியா குடும்பத்தினர் மீது தாக்கு: 16 பேர் பலி..!!
ஈராக்கில் சன்னி-ஷியா பிரிவினைவாத குழுக்களிடையே மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.
இந்நிலையில் இன்று இரவு தலைநகர் பாக்தாத்தின் கிழக்கு பகுதியிலுள்ள லடிபியா நகரில் ஷியா குடும்பத்தினரை குறிவைத்து ஆயுதம் ஏந்தியவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
இரவு வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த தீவிரவாதிகள் எனது அப்பா, இரு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என 6 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 16 பேரை சுட்டுக்கொன்றனர் என்று அங்கிருந்த தப்பித்தவர் கூறினார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
நேற்று நடந்த கார்குண்டு தாக்குதலில் தலைநகர் பாக்தாத் பகுதியில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்ற மாதம் நடந்த பிரிவினை வாத தாக்குதலில் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 மாநிலங்களில் மட்டும் அங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.