இரு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை
இரண்டு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மதவாச்சி மைத்திரிபுர இராணுவ முகாமில் கடமையாற்றிய பெண் இராணுவத்தினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த இரண்டு பெண்கள் கடந்த ஆறு நாட்களாக காணவில்லை. உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்காது முகாமை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த இரண்டு பேரும் வீட்டுக்கும் செல்லவில்லை. இவர்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் முகாம் அதிகாரிகள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் படையை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய சந்தேகம் வெளியிட்டுள்ளார்.